கர்நாடகத்தைச் சேர்ந்த முதியவர் மரணம் கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி ரத்த பரிசோதனை ஆய்வில் உறுதியானது
" alt="" aria-hidden="true" />

பெங்களூரு, 

 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி விட்டது. கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

 

கர்நாடக மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் சமீபத்தில் சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மரணம் அடைந்தார். அவரது ரத்த பரிசோதனை ஆய்வறிக்கை வெளியாகாததால், அப்போது அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் உயிர் இழந்தாரா? என்பது உறுதியாகவில்லை.



 



கொரோனாவுக்கு முதல் பலி

 

இந்த நிலையில், அந்த முதியவரின் ரத்த பரிசோதனை அறிக்கை கர்நாடக சுகாதார துறைக்கு நேற்று கிடைத்தது. அதில், அந்த முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே மரணம் அடைந்ததாக கூறப்பட்டு உள்ளது.

 

இந்த தகவலை அந்த மாநில சுகாதார துறை மந்திரி பி.ஸ்ரீராமுலு தெரிவித்து உள்ளார்.

 

இது கொரேனா வைரசுக்கு இந்தியாவில் ஏற்பட்ட முதல் பலி ஆகும்.

 

15 நாட்டினருக்கு தடை

 

சீனா, அமெரிக்கா, இத்தாலி, தென்கொரியா, ஈரான், ஜப்பான், மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், இந்தோனேசியா, ஸ்பெயின், பிரான்ஸ், வியட்நாம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 15 நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லி விமான நிலையத்தின் வரி செலுத்த தேவையில்லாத ‘ஷாப்பிங்’ பகுதிக்குள் நுழைய இந்திய சுங்க இலாகா தடை விதித்துள்ளது.

 

அதுபோல், மேற்கண்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய இந்தியர்களும் அங்கு நுழைய அனுமதி கிடையாது.

 

அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர், வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் இந்தியாவுக்கு வருவதாக இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக, மார்க் எஸ்பரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

74 ஆக உயர்வு

 

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ், மேலும் 13 பேருக்கு தொற்றி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்ததாக தெரிவித்துள்ளது. இவர்களில் 16 இத்தாலி சுற்றுலா பயணிகள், ஒரு வெளிநாட்டவர் ஆகியோரும் அடங்குவர்.

 

கேரளாவில் அதிகபட்சமாக 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
Image