விஜய் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரை யார் இயக்கப் போகிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும், ஷங்கர் இயக்குகிறார் என்றும், அனிருத் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களும் அந்த தகவலை சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ரூ. 100 கோடி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ரூ. 50 கோடி முன்பணமாக அளிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ரூ. 100 கோடி சம்பளம் பெறுவதன் மூலம் விஜய் ரஜினிகாந்தை முந்திவிட்டார் என்கிறார்கள் ரசிகர்கள். தர்பார் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ. 90 கோடி சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
வதந்தியே
விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு ரூ. 50 கோடி முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது எல்லாம் வெறும் வதந்தி தான். யாரும் சம்பள விஷயத்தில் ரஜினியை முந்தவில்லை என்று கோலிவுட்டில் விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் அவர் பாட்டுக்கு மாஸ்டர் படத்தில் நடிக்கிறார். அவரை பற்றி யாரோ வேண்டும் என்றே இப்படி கிளப்பி விடுகிறார்கள் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.