மலையாள நடிகை கடத்தல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கூறிய நடிகர் திலீப்பின் மனுவை ஏற்க கொச்சி நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது கடத்தப்பட்டு, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நடிகையை கடத்தி அசிங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். நடிகையை கடத்திய வழக்கில் திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிடுக்கக் கோரி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.