எல்லாத் துறையிலும் மந்தநிலை ஏற்படுவது சகஜம்தான் எனக் கூறியுள்ள மத்திய அரசு, நலிவடைந்துள்ள ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க அரசு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மந்தநிலை நீடிக்கிறது. வாகன என்ஜின் கட்டுப்பாடுகள் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, வாடிக்கையாளர்களிடையே தேவை குறைவு, மந்தமான விற்பனை போன்ற காரணங்களால் ஆட்டோமொபைல் துறை செய்வதறியாது திகைக்கிறது.
இதனால் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் உற்பத்தி அளவையும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன
ஆனாலும், பண்டிகை சீசனின்போது பயணிகள் வாகன விற்பனை 0.3 சதவீதம் வரையில் வளர்ச்சி கண்டிருந்தது. வாகன அச்சு விதிமுறைகளில் சரக்கேற்ற அளவு 25 சதவீதம் உயர்த்தப்பட்டதால் வாகனங்களுக்கான தேவை குறைந்துபோனது.
மேலும், வாகன என்ஜின் மாற்றக் கட்டுப்பாடுகளாலும் பின்னடைவு ஏற்பட்டது” என்றார்.