ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பண்டிகை சீசனை முன்னிட்டு வாகன விற்பனை சிறப்பாக இருக்கும்.
வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதற்காக வாகன விற்பனை நிறுவனங்கள் இக்காலத்தில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கும். ஆனால் இந்த ஆண்டில் வாகன விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கவில்லை.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிக மோசமான இழப்புகளைச் சந்தித்து வருகிறது. வேலை இழப்புகளும், வருவாய் இழப்புகளும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டின் பண்டிகை சீசனில் வாகன விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.